ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது என்னுடைய இலக்கு - இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் - ஆசிய பாரா விளையாட்டுப்போட்டியில் தடகளத்தில் தங்கபதக்கம் வென்ற சோலைராஜ் பேட்டி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள A. குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் - ஈஸ்வரி தம்பதியின் மகன் சோலைராஜ்(31), கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது சோலைராஜ் தனது 19வயதில் இராணுவத்தில் சேர்ந்த பணியாற்றியானர். 2018ல் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு தனது இடது காலினை இழந்தார். இருந்த போதிலும் மனம் தளரமால் விளையாட்டில் கவனம் செலுத்தினர். குறிப்பாக நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தடகள வீரராக மாறினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் பங்கேற்ற சோலைராஜ் T64 பிரிவில் 6.80 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். தொடர்ந்து தனது விடமுயற்சியினை கைவிடமால் பயிற்சி மேற்க்கொண்ட சோலைராஜ் தற்போது ஜப்பானின் நாகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் (Asian Para Games) நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் சோலைராஜ் தங்கம் வென்று சாதனை படைத்தார்.சோலைராஜ்க்கு திருமணமாகி முத்துப்பிரியா என்ற மனைவியும் தர்ஷிகா ஸ்ரீ, தாரிகா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன.
இந்த நிலையில் ஊருக்கு திரும்பிய தடகள வீரர் சோலைராஜ்க்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கிராம மக்கள், தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிறப்பான வரேற்பு அளித்து வாழ்த்தினர்.
இதனை தொடர்ந்து பதக்கம் வென்ற தடகள வீரர் சோலைராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தொடர்ச்சியாக 2வது மூறை பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்த போதிலும் கடந்த போட்டியை விட இந்த போட்டியில் தனது செயல்பாடு குறைவாகத்தான் இருந்ததாகவும், அடுத்து வரும் போட்டிக்கு சிறப்பாக செயல்பாடு முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டு வரக்கூடிய உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதான் தன்னுடைய இலக்கு, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், வருங்கால இளைஞர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் ஒரு குறிக்கோள் வைத்து அதை நோக்கி பயணிக்க வேண்டும்.. போதை பழக்கவழக்கங்களில் செல்லாமல், சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்காமல் இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தினால் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். விளையாடி பதக்கம் என்றால் போதும் மற்றவைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று விளையாட்டு வீரர்களுக்கு அரசு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறது. பாரா விளையாட்டுக்கள் குறித்து பலருக்கு விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. எனவே அரசு அதற்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களை மேற்கொண்டால் இன்னும் கிராமப்புறங்களில் இருந்து நிறைய விளையாட்டு வீரர்கள் வருவார்கள். என்னுடைய குடும்பம் எனக்கு முழு ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுத்த காரணத்தினால் தான் இன்றைக்கு இந்த வெற்றிகளை பெற முடிந்தது என்றார்.
அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக கட்சியினர் சோலை ராஜின் இல்லத்திற்கே நேரில் சென்று சோலைராஜுக்குபாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தூத்துக்குடி வடகிழக்கு மாவட்ட செயலாளர் A.K. மகேஸ்வரன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீ பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் S. எபினேசர், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் விஜயகுமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் A. தங்கமாரியப்பன், விடுதலை சிறுத்தை கட்சி விளாத்திகுளம் மாவட்ட செயலாளர் ஆ.சடையாண்டி, தமிழக வெற்றி கழகம் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.