விளாத்திகுளத்தில் மகாசக்தி, ஸ்ரீ செல்லியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு பால்குடம், அம்மன் அக்னிசட்டி எடுத்து ஊர் விளையாடுதல் நிகழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் க. சுப்பிரமணியபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாசக்தி ஸ்ரீ செல்லியம்மன் அருள்மிகு ஸ்ரீ முனியசாமி திருக்கோவில் 18-ம் ஆண்டு ஆடி கொடை விழாவை முன்னிட்டு, இன்று காலை விளாத்திகுளம் வைப்பாற்றில் அம்மன் அக்னி சட்டி, தீர்த்த குடம் மற்றும் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அம்மன் அக்னிசட்டி எடுத்து ஊர் விளையாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஏராளமான காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வைப்பாற்றில் இருந்து பால்குடம் மற்றும் அக்னி செட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து செல்லியம்மன் திருக்கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இதனைத்தொடர்ந்து மகாசக்தி ஸ்ரீ செல்லியம்மன் அருள்மிகு முனியசாமி உள்ளிட்ட இதர தெய்வங்களுக்கு பால் மஞ்சள் இளநீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாதாரணை நடைபெற்றது.
இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு,சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் பூசாரிகளான கண்ணன், சுப்புராஜ்,பாலபாரதிசுவாமிகள், அரசு பேருந்து ஓட்டுனர் முருகன் மற்றும் கோவில் நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் கமிட்டியாளர்கள் இலவச திருப்பணி கமிட்டி இளைஞர்கள் கிராம பொதுமக்கள் என பலர் ஏற்பாடு செய்திருந்தனர்.