விளாத்திகுளத்தில் அரசு பேருந்தில் பயணித்த பயணி பேருந்திலயே உயிரிழப்பு!
பேருந்தோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றும் உயிரைக்காப்பாற்ற முடியால் பரிதாபம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த சர்க்கரை நாயக்கர் என்பவரின் மகன் முருகன் (52), இவர் சூரங்குடியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில் சென்னை செல்வதற்காக சூரங்குடியில் இருந்து ராமேஸ்வரம் to திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் விளாத்திகுளம் வருவதற்கு பேருந்தில் ஏறி வந்து கொண்டிருந்தபோது, விளாத்திகுளம் தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே முருகனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது, இதனை அடுத்து பேருந்து ஓட்டுநர் அவசர அவசரமாக பயணிகளை விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு, முருகனை அதே பேருந்தில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர், முருகனை பரிசோதனை செய்த மருத்துவர் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அரசு பேருந்தில் அவசர அவசரமாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றும் முருகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.