அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!



கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்கள்!



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர், பொது மக்களுக்காக கண் சிகிச்சை முகாம்,ரத்ததான முகாம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய உத்தரவின் பேரில் தமிழக முழுவதும் அதிமுகவினர் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள TDTA நடுநிலைப்பள்ளியில் விளாத்திகுளம் அதிமுக ஒன்றியம் மற்றும் நகர கழகம் சார்பாக மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது, இந்த மாபெரும் கண் சிகிச்சை முகாமினை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தொடங்கி வைத்தார்.  


நடைபெற்ற இந்த மாபெரும் கண் சிகிச்சை முகாமில்   விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.



இந்நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், மத்திய ஒன்றிய செயலாளர் பால்ராஜ்,நகரசெயலாளர் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிவகாமசுந்தரி, ஆனந்த்,மகளிர் அணி சாந்தி அதிமுக நிர்வாகி சண்முகசாமி, மருத்துவர் ஸ்ரேயா, சமூக ஆர்வலர் இளையராஜா மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.