விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் அரசு
மருத்துவமனையில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் டாக்டர்.ஜெகவீரபாண்டியன் என்ற
குணசேகரன் உத்தரவின்படி கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு அரசு மருத்துவமனை
தலைமை மருத்துவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.மருத்துவ அலுவலர் அஜய் முன்னிலை
வகித்தார்.இந்தமுகாமில் தொழுநோய் எப்படி பரவுகிறது,தொழுநோய் பற்றிய ஆரம்ப அறிகுறிகள் மற்றும்
தொழுநோய் சிகிச்சைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.மேலும் அதை தடுக்கக்கூடிய வழிமுறைகளையும்
எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
Vilathikulam
தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் பொன்னூஞ்சல் தாலாட்டு!
அடுத்த
மழைநீருடன் கழிவுநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்ததுகால்நடைகள் உயிரிழந்து துர்நாற்றம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026