கமுதி அருகே மழைநீருடன் கழிவுநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்ததுகால்நடைகள் உயிரிழந்து துர்நாற்றம்-கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக அப்பகுதியில் குடியிருப்புகளை மழைநீருடன் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் தாங்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் தாங்கள் ஆசையாய் வளர்த்த ஆடு கோழி உள்ளிட்ட  கால்நடைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதால் தாங்கள் அப்பகுதியில் வசிப்பதற்கு ஏற்ற இடம் இல்லை எனக் கூறி குடியிருப்புகளை காலி செய்து வேறு இடத்திற்கு செல்ல அப்பகுதி கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்,சிறு மழை பெய்தால் கூட தாங்கள் குடியிருப்பு பகுதியை  மழை கழிவு கலந்து சூழ்ந்து தங்களின் குழந்தைகள் பள்ளி கல்லூரிக்கும் அத்தியாவசிய பணிக்கு செல்ல முடியாத நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்டோரிடம் பலமுறை நேரில் சென்று பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வில்லை எனவும், இந்த நிலை தொடர்ந்தால் தாங்கள் குடியிருப்பு பகுதிகளை காலி செய்து வேறு இடத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர், எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.