விளாத்திகுளம் அருகே தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்: சீறிப்பாய்ந்த 41 ஜோடி மாடுகள்!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
சின்னமாடு,பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி,திருநெல்வேலி,இராமநாதபுரம்,மதுரை,தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 41 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு, விழா கமிட்டியின் சார்பாக ரொக்கப்பணம் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
போட்டியானது குளத்தூர் to விளாத்திகுளம் சாலையில் நடைபெற்றது,இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையின் இரு புறமும் என்று ஏராளமான பொதுமக்கள் மற்றும் பந்தைய ரசிகர்கள் ஆர்வமுடன் பந்தயத்தினை கண்டு ரசித்தனர்.
இந்த மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், "வி த லீடர்ஸ்" அமைப்பின் விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் அருண்ராஜா,திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி மாவட்ட அரசு பணியாளர் சங்க மாவட்டசெயலாளர் இனிய இசக்கி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.