விளாத்திகுளம் அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது:ரூபாய் 8000 மற்றும் டோக்கன் ,சீட்டுகட்டுகள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் இயங்கி வரும் நிசான் ஸ்போர்ட்ஸ் & ரேக்கரேஷன் கிளப்பில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலின் பேரில் புதூர் காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் சீட்டு கட்டுகள் மற்றும் 2000 ரூபாய் டோக்கன் 10,300 ரூபாய் டோக்கன் 25, 1000 ரூபாய் டோக்கன் 20, 500 ரூபாய் டோக்கன் 10 மற்றும் 8000 ஆகியவற்றை பறிமுதல் செய்து, பணம் வைத்து சூதாடிய துரைசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்பாண்டி (54), புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி (62), கம்பத்துபட்டி கிராமத்தைசேர்ந்த துரைப்பாண்டி (54), சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி(60), சின்னூர் கிராமத்தைச்சேர்ந்த பால்ராஜ் (65), காடல்குடி கிராமத்தைசேர்ந்த மேன்ஷன் (57), அருப்புக்கோட்டையை சேர்ந்த முத்தையா (30), அருப்புக்கோட்டை சேர்ந்த முத்துமூர்த்தி(40), புதூரை சேர்ந்த திருப்பதி உள்ளிட்ட 9 பேரை புதூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.