விளாத்திகுளம் அருகே இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் சம்பவத்தில் ஒரே நாளில் 42 பேர் சிறையில் அடைப்பு!
மருத்துவ பரிசோதனைக்கு பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மற்றும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற போலீசார்...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இலந்தைகுளம் மற்றும் இலக்கம்பட்டி கிராமங்களுக்கு இடையே அரசு புறம்போக்கு இடத்தில் கபடி விளையாடிக்கொண்டிருந்தபோது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில்,இரு தரப்பினரும் “மாறி மாறி” கற்களாலும் கம்புகலாலும் தாக்கிக்கொண்டனர், இதில் பாதுகாப்பு பணிக்கு சென்ற உதவி ஆய்வாளர் உட்பட ஐந்து காவலர்கள் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த கல்வீச்சு தாக்குதல் கலவரத்தில் ஈடுபட்ட இரு கிராமங்களை சேர்ந்த 42 பேர் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, 42 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இலந்தைககுளம் கிராமத்தைச் சேர்ந்த 20 பேரை திருச்சி மத்திய சிறைச்சாலையிலும், இலக்கம்பட்டி கிராமத்தைச்சேர்ந்த 22 பேரை மதுரை மத்திய சிறைச்சாலையிலும் அடைத்தனர்.