விளாத்திகுளம் தொகுதிக்கு கூடுதலாக வரப்பட்ட 312 வாக்கு இயந்திரங்கள் STRONG ROOM-ல் வைத்து சீல்!
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதலாக 312 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பட்டதைத் தொடர்ந்து இன்று மாலை 7.45 மணி அளவில் எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் வைப்பறையில்(STRONG ROOM) வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் கூடுதலாக வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் (தேர்தல்) பாலமுருகன் மற்றும் சண்முகவேல் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.