விளாத்திகுளம் அருகே "1 கோடி மரங்கள்" என்னோட கனவு திட்டம் - மரங்கள் மக்கள் இயக்க நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நெகிழ்ச்சி! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டியில் "மரங்கள் மக்கள் இயக்கம்" சார்பில் மகளிர் குழுக்கள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை, ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பொதுமக்களிடம் பேசிய போது, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு கோடி மரங்கள் நடுவதே என்னுடைய கனவு திட்டம் என்றும், விளாத்திகுளம் தொகுதியை பசுமையானதாக மாற்ற அனைவரும் கட்டாயம் மரம் வளர்க்க வேண்டும் என்றும் மரம் வளர்த்தலை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து தொகுதியில் முதலாவதாக மாசார்பட்டி ஊராட்சியில் மகளிர் குழுக்களை துவக்கி அதன் மூலம் மரம் வளர்ப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு புங்கை மற்றும் வேம்பு என இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டு குழுவிற்கு 15 பெண்கள் வீதம் முதல் கட்டமாக 30 பேர் இந்த மரங்கள் மக்கள் இயக்க குழுக்களில் சேர்ந்துள்ளனர். மேலும் இந்நிகழ்வில், மரங்கள் மக்கள் இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் ராகவன் மற்றும் எம்எல்ஏ மார்க்கண்டேயன் குழுக்களுக்கு மரம் வளர்ப்பதற்கான முதற்கட்ட நிதித்தொகையை வழங்கினர். இதில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி கார்த்திகை முருகன், ஒன்றிய துணை செயலாளர் பாலையா, ஊராட்சி மன்ற துணை தலைவர் மாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அழகுராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக்குமார், கிளை செயலாளர்கள் சண்முகம், செல்லத்தாய் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
1 கோடி மரங்கள் என்னோட கனவு திட்டம் - மரங்கள் மக்கள் இயக்க நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நெகிழ்ச்சி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீ பாதாள காளியம்மன் சித்திரை களரி உற்சவ விழாவை முன்னிட்டு 1001 உருவ சிலைகள் செலுத்திய பக்தர்கள்!
அடுத்த
ஓசி சரக்கு தர மறுத்த பார் ஊழியரை வெட்டி கொலை செய்த திமுக நிர்வாகி?
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026