தூத்துக்குடி பகுதியில் பல்வேறு தனியார் ATM மையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் சென்சார் வயர்களை வெட்டி பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட, தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவரின் மகன் காட்வின் ஜோஸ் (29) என்பவரை தெர்மல் நகர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த  திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு ஏடிஎம் மையங்களில் காட்வின் ஜோஸ் திருடன் முயற்சி செய்தது தெரியவந்துள்ளது, மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.