சக்ஷம் மாற்றுத்திறனாளர்கள் நலன் விரும்பும் தேசிய அமைப்பின் அமைப்பின் சார்பில் தேசிய கண்தான விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி முதல் மதுரை வரை ஆட்டோ வாகன விழிப்புணர்வு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ந்தேதி சக்ஷம் மாநில செயலாளர் முத்துமணிகண்டன் தலைமையில் கன்னியாகுமரியில் இந்த விழிப்புணர்வு ஆட்டோ பயணம் நேற்று தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகருக்கு இன்று வந்த இந்த ஆட்டோ பயணத்திற்கு பயணியர் விடுதி முன்பு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை தலைவர் நீதிப்பாண்டியன், பாஜக நகர செயலாளர் சீனிவாசன், நகர பொதுச்செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான விஜயகுமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து கண்தானம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு பயணம் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம் வழியாக நாளை மதுரையில் நிறைவு பெறுகிறது.
தூத்துக்குடி
கண்தானம் குறித்த ஆட்டோ விழிப்புணர்வு பயணத்திற்கு கோவில்பட்டியில் வரவேற்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புகார் தெரிவித்த ஒரே நாளில் நடவடிக்கை: மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்கிய ஆட்சியர்!!
அடுத்த
செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம்!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026