தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் புதூர் குறுவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் மகன் மாரிமுத்து என்பவர் நேற்று காலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு சென்றதாகவும் அங்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளிக்க சென்றதாகவும் அங்குள்ள ஒரு அலுவலர் தன்னிடம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை  மற்றும் பிற அடையாள அட்டை கேட்டதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தார். மேற்கண்ட நபரை உடனே விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறினார். மேற்படி நபர் ஆட்டோவில் வந்தார். அவரால் ஆட்டோவில் இருந்து இறங்க இயலவில்லை மனுதாரரைப் பற்றி விசாரணை செய்யப்பட்டது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருந்தார். மனுதாரருக்கு இரண்டு கைகளும் கால்களும் முழுமையாக செயல்படவில்லை. அவருக்கு  தந்தை இல்லை தாயார் உள்ளார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் இரண்டு சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மாரிமுத்து என்பவருக்கு வயது 41 இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை பெயரில் ஒரு வீடு உள்ளது. இவர் வீட்டு அருகே சூப் தயாரித்து விற்பனை செய்வதாகவும் தனக்கு உதவியாக தனது தாயார் இருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு வீடு மட்டும் இருப்பதால் அவரது குடும்பத்தில் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்க இயலாது என்பதாலும், அவர் வசிக்கும் நாகலாபுரம் கிராமத்தில் தகுதியான காலி மனை இல்லை என்பதாலும் தனக்கு எந்த கிராமத்தில் வீட்டுமனை கிடைத்தாலும் தாயாருடன் அங்கு சென்று வசிக்க தனக்கு விருப்பம் உள்ளது என்று தெரிவித்தார்.  இந்த காரணங்கள் கருத்தில்கொண்டு விளாத்திகுளம் கிராமத்தில் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தில் புல எண் 251/88ல் 60 ச.மீ  யை மனுதார்க்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் தனது நிலையை தெரிவித்த உடனேயே  தனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. மாரிமுத்து  தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்து இலவச வீட்டு மனை பட்டாவை விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் துணை வட்டாட்சியர் பாலமுருகனிடம்  பெற்று சென்றார். புகார் தெரிவித்த ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்-க்கு மாரிமுத்து  தனது நன்றியை தெரிவித்தார்.