விளாத்திகுளம் அருகே 10 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கழிவு நீர் வாறுகால் அமைக்கும் பணியை விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் வடகரை பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாமல் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கும் அவல நிலை இருந்து வந்தது இதனை அடுத்து புதிதாக கழிவு நீர் வாறுகால் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர், இதனைத்தொடர்ந்து புதிதாக வாறுகால் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரியநாயகிபுரம் வடகரை பகுதியில் 200 மீட்டர் தூரம் புதிதாக கால்வாய் அமைக்க 15 அவது ஒன்றிய பொது நிதியில் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதிக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
அதற்கான பணியை விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் பூஜை செய்து இன்று தொடங்கி வைத்தார் தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக வாறுகால் அமைத்துத் தந்த அதிமுக யூனியன் சேர்மனுக்கு பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்,