விளாத்திகுளம் அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் விருசம்பட்டி கிராமத்தில் ,சந்தன மாரியம்மன் மாடசாமி திருக்கோவில் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது,
பூஞ்சிட்டு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.
இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு, விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.