குளத்தூரில் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டும் பணிக்கு யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தூர் பகுதியில் புதிய கலையரங்கம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் ஒதுக்கீடு செய்து குளத்தூர் பகுதியில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்வதற்கு வருகை தந்த யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதே தொடர்ந்து புதிய கலையரங்கம் கட்டுமான பணியை விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், குருநாதன், ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி, துணை ஊராட்சி மன்ற தலைவர் மாரிச்செல்வி செல்வப்பாண்டி, 8-வது வார்டு உறுப்பினர் ஜீவிதா சதீஷ்குமார், 6-வது வார்டு உறுப்பினர் முத்துச்செல்வி பகவதி ராஜ், வயது 9-வது வார்டு உறுப்பினர் கெங்கு ராஜன், மகளிரணி நிர்வாகி குருலட்சுமி, கிளை நிர்வாகிகள் சந்துரு, சுந்தரம், லட்சுமணன், அஇசமக அவைத்தலைவர் தனுஷ்கோடி முருகன் உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்