தூத்துக்குடியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினரை அறிவாளால் தாக்க முயன்ற பிரபல ரவுடிகள் கைது: தென்பாகம் போலீசார் நடவடிக்கை. தூத்துக்குடி பெரிய கோவில் தெரு பகுதியில் நேற்று இரவு தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவரை பிடித்து விசாரணை செய்ய முயன்றனர் அப்போது கையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருந்த இருவரும் போலீசாரை தாக்க முயன்று கொலை மிரட்டல் விட்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கி முனையில் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரும் பிரபல ரவுடிகளான சாண்டல் என்ற சந்தனராஜ் மற்றும் செல்வம் என்பது தெரிய வந்தது சாண்டல் என்ற சந்தனராஜ் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 19 வழக்குகளும் செல்வம் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது இருவரையும் கைது செய்த காவல்துறையினர் பயங்கர ஆயுதங்களுடன் இவர்கள் அரசியல் பிரமுகர்கள் யாரையும் கொலை செய்வதற்காக பதுங்கி இருந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் பிரபல ரவுடிகள் போலீசாரை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
போலீசாருக்கு அரிவாள் வெட்டு இருவர் கைது:துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து போலீசார் !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை.
அடுத்த
கிராம நிர்வாக அலுவலகத்தில் பூட்டை உடைத்து லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்கள் திருட்டு.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026