தூத்துக்குடி பக்ரீத் திருநாளை முன்னிட்டு ஈத்கா தோட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அன்பு சகோதரத்துவம் வேண்டி தலைமை இமாம் அப்துல் அலிம் தலைமையில் சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

இறைதூதர் இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவது தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை ஆகும் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு அன்பு சகோதரத்துவம் உலக அமைதி வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்புத் தொழுகையில் ஜாமியா பள்ளிவாசல் இமாம்கள் சதக்கத்துல்லா,  ஷேக் உஸ்மான், மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர் மீராசா,  தற்காலிக செயலாளர் ரகுமான், பொருளாளர் மூஷா,   ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.தொழுகைக்குப் பின் ஒருவருக்கு ஒருவர் ஆறத் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று ஆடுகளை பலியிட்டு குருபானி வழங்கினர் இதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்கின்றனர்.