செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மளிகை கடையில் பொருத்தியிருந்த CCTV கேமராவை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருட முயற்சித்தவர் கைது!

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் ரகுசரவணன் (42) என்பவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் ரகுசரவணன் தனது மளிகை கடையில் CCTV கேமராக்களை பொருத்தி சிசிடிவி காட்சிகளை தனது செல்போனில் பார்க்கும்படி இணைத்துள்ளார். இந்நிலையில் 03.06.2023 அன்று அதிகாலை பூட்டியிருந்த தனது கடையின் முன்பக்கம் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவை மர்மநபர் ஒருவர் உடைத்து கடைக்கு உள்ளே சென்று பொருட்களை திருட முயன்றது அவரது செல்போனில் தெரியவந்துள்ளது.


இதுகுறித்து ரகுசரவணன் அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆனந்த முத்துராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி ரகுசரவணனது கடையின் சிசிடிவி கேமராவை உடைத்து பொருட்களை திருட முயற்சித்த கருங்குளம் பகுதியைச் சேர்ந்த எதிரி இசக்கி மகன் மணிகண்டன் (29) என்பவரை கைது செய்தார்.