அனைத்து குடும்பதலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வலியுறுதி விநாயகருக்கு மனு கொடுத்து - தேங்காய் வெடலை போட்டு கோவில்பட்டியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர்.மகளிர் உரிமைத்தொகை பெற அரசு விதித்துள்ள நெறிமுறைகள், நிபந்தனைகளை கண்டித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும், அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் த.மா.காவினர் தாலூகா அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஜெயகணபதி கோவிலில் மனு கொடுத்து, கோவில் முன்பு தேங்காய் வெடலை போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்தமிழக அரசு குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ 1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க உள்ளது. இந்த திட்டதிற்கான நெறிமுறைகள், வரைமுறைகள் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நெறிமுறைகள் மற்றும் வரைமுறைகளுக்கு ஒரு புறமும் வரவேற்பு இருந்தாலும், மறு புறம் எதிர்ப்புகளும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி அனைத்து குடும்பத்தலைவிகளுக்கு ரூ 1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும், அதற்காக வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகள், நிபந்தனைகளை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், மேலும் கடந்த 2 ஆண்டுகளாக மகளிர் உரிமை தொகை வழங்கவில்லை என்பதால் அரசு ஊழியர்களுக்கு அரியர் தொகை வழங்குவது போல 2 ஆண்டுகளையும் சேர்த்து உரிமைத்தொகை வழங்க வலியுறுத்தி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் தாலூகா அலுவலகம் அருகேயுள்ள ஸ்ரீ ஜெயகணபதி திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து, தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர். மேலும் கோவில் முன்பு தேங்காய் வெடலை போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை வழங்கினர்.