தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அலுவலகத்தில்  20 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை முடிவு கட்டுக்கட்டாக ஆவணங்களை ஐந்துக்கும் மேற்பட்ட பைகளில் எடுத்துச் சென்ற வருமானவரித்துறையினர் பரபரப்பு!தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10:30 மணி முதல் சென்னை புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணை வருமான வரித்துறை இயக்குனரக அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.சுமார் தொடர்ந்து இருபது மணி நேரமாக நேற்று இரவு முழுவதும் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வந்த இந்த வருமான வரி சோதனை இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்தது.இதைத் தொடர்ந்து வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட பைகளில் ஆவணங்களை வருமானவரித் துறையினர் எடுத்து சென்றனர்.  இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை இந்த சோதனை வங்கியில் முறைகேடாக நடைபெற்ற பணம் பரிவர்த்தனை குறித்து நடைபெற்றதா அல்லது வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தவர்கள் குறித்து நடைபெற்றதா அமைச்சர் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்குகள் அவரது உறவினர்கள் நண்பர்கள் வங்கி கணக்கில் குறித்து சோதனை செய்யப்பட்டதா என்பது வருமான வரித்துறை மற்றும் வங்கி நிர்வாகத்தின் அறிக்கைக்கு பின்பே தெரிய வரும்.