கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் புகுந்த நல்ல பாம்பு - ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு துறைக்கு தண்ணி காட்டிய குட்டி நல்ல பாம்பு..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகரில் உள்ள துரை என்பவர் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளார். இந்த அலுவலகத்தில் மந்தித்தோப்பைச் சேர்ந்த பாலு என்பவருடைய மகள் தங்கம் (21)பணியாற்றி வருகிறார். இவர் தினமும் மந்தித்தோப்பில் இருந்து அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வருவதுண்டு , அலுவலகம் இரவு 7 மணிக்கு முடித்தவுடன். இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியது வழக்கம் . அது போல் சனிக்கிழமை காலை அலுவலகத்திற்கு வந்த தங்கம் பணி வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு இருசக்கர வாகனத்தை எடுத்த பொழுது அதில் நல்ல பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு ஓடி வந்து அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார் அருகில் இருந்தவர்கள் கம்பை எடுத்து இருசக்கர வாகனத்தை தட்டி பார்த்தபோது பாம்பு வெளியே வரவில்லை. உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருசக்கர வாகனத்தில் தேடிய பொழுது கிடைக்கவில்லை. மேலும் பெட்ரோல் இருசக்கர வாகனத்தில் தெளித்தும் பாம்பு வெளிய வரவில்லை.இதனால் உடனடியாக இருசக்கர வாகன மெக்கானிக்கல் உடனடியாக வரச் சொல்லி இரு சக்கர வாகனத்தை கழற்சியை போது வாகனத்தின் முன் பகுதியில் குட்டி பாம்பு இருப்பது தேடி வந்தது உடனடியாக தீயணைப்புத் துறையினர் லாபமாக பிடித்து எடுத்துச் சென்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது