மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம்.கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவிலில் ஆரம்பித்து கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையை பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்பவும் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தின் காரணமாகவும், விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். புனித ஓம் பள்ளியின் தாளாளர் லட்சுமணப் பெருமாள் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகிகள் முனைவர்.சம்பத்குமார், கலைச்செல்வம், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் முருகானந்தம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பொன்ஶ்ரீராம், மந்தித்தோப்பு ஊழல் எதிர்ப்பு இயக்கம் காந்திராஜ், ஜெய்பீம் அறக்கட்டளையின் தாவீது ராஜா, ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் மாடசாமி, நகரச்செயலாளர் கருப்பசாமி, வழக்கறிஞர் பாபு, இசைக்கலைஞர் பிரபாகரன் ஐஎன்டியுசி ராஜசேகரன், பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர். ரவிக்குமார், மருதம் மாரியப்பன், காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு அருள்தாஸ், கட்டிடத் தொழிலாளர் சங்கத்தலைவர் உத்தண்டராமன், ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
தூத்துக்குடி
சாலையை விரிவுபடுத்த கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் சார்பில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மீனவர்கள் மற்றும் காவல் துறை இடையே வாக்குவாதம்.
அடுத்த
கோவில்பட்டியில் பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 67வது நினைவுநாள் அனுசரிப்பு.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026