தூத்துக்குடி துறைமுக சாலையில் துறைமுகத்திலிருந்து லோடு ஏற்றி வந்த லாரி டிரைவரை  மோட்டார் வாகன ஆய்வாளர்  தாக்கியதை கண்டித்து துறைமுக சாலையில் லாரி நிறுத்தி டிரைவர்கள் சுமார் ஒரு மணி நேரமாக சாலை மறியல் போராட்டம்:  லாரி டிரைவர் தாக்கியதாக மோட்டர் வாகன ஆய்வாளர் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி,தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் லோடை ஏற்றிக்கொண்டு வேதாரணியத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் வெற்றிவேல் என்பவர் அறந்தாங்கி நோக்கி ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார்.அப்போது தூத்துக்குடி துறைமுக சாலையில் அனல் மின் நிலைய குடியிருப்பு  பகுதி அருகே வெற்றிவேல் ஓட்டி வந்த லாரியை மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸ் உள்ளிட்ட சிலர் வாகன சோதனைக்காக அரசு வாகனத்தில் வராமல் தனியார் வாகனத்தில் வந்து மறித்துள்ளனர் அப்போது லாரியில் கூடுதல் எடை ஏற்றியதாக மோட்டார் வாகன ஆய்வாளர் ஃபெலிக்ஸ்  லாரி டிரைவரின் செல்போனை கேட்டு மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த லாரி டிரைவர் வெற்றிவேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த தாக்குதலில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸ் லாரி டிரைவர் வெற்றிவேல் தன்னை தாக்கியதாக கையில் ரத்த காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் லாரி டிரைவரை மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட சிலர் தாக்கியதை கண்டித்து தூத்துக்குடி துறைமுக சாலையில் அனல் மின் நிலைய  குடியிருப்பு அருகே  நூற்றுக்கணக்கான லாரி டிரைவர்கள் லாரிகளை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் லாரிகள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.லாரி டிரைவர்கள் சுமார் 1மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பகுதிக்கு தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான காவல்துறையினர் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆனால் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என லாரி டிரைவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து லாரி டிரைவர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதை அடுத்து காவல்துறையினர் டிரைவர்களை லாரி கண்ணாடியை உடைத்து விடுவோம் என மிரட்டியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு லாரி டிரைவர்கள் வாகனத்தை எடுத்துச் சென்றனர் லாரி டிரைவர்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

.