மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இரண்டு இன குழுக்களுக்கு இடையே கலவரம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் மணிப்பூர் அரசு உடனடியாக டிஸ்மி செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.