விளாத்திகுளம் அருகே இ.வேலாயுதபுரம் கிராமத்தில்  டிராக்டர் மோதி  மூதாட்டி பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிழக்குத் தெரு பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மனைவி முனியம்மாள் (80) இ வேலாயுதபுரம் கிராம  கண்மாய் கரையில் உள்ள வேப்ப மரத்தில் வேப்பமுத்து எடுத்து  கொண்டிருந்தபோது,கீழ வைப்பாரில் இருந்து மேல்மாந்தை நோக்கி சென்ற டிராக்டர் எதிர்பாராத விதமாக   முனியம்மாளின் மீது  மோதி விபத்துக்குள்ளானதில் முனியம்மாள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த  சூரங்குடி காவல் நிலைய போலீசார்  முனியம்மாளின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து  டிராக்டரை ஒட்டி வந்த   மேல்மாந்தை கிராமத்தை சேர்ந்த  ஆத்திராஜ் என்பவரின் மகன் பெருமாள் (30) என்பவரை பிடித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.