தூத்துக்குடி பாகம்பரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ளதமிழ் புத்தாண்டை முன்னிட்டு முருக பெருமானுக்கு அன்னத்தால் அலங்காரம் !
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு பால் தயிர் தேன் விபூதி இளநீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்று பின்னர் அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமான் மற்றும் வள்ளி தெய்வானையை வழிபட்டு சென்றனர்.