எட்டையாபுரத்தில் சாலை விபத்தில் கட்டிடத்தொழிலாளி உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் - நடுநவீர்பட்டி பகுதியை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் மாரிமுத்து (36), இவர் கட்டிடத்தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது எட்டையாபுரம் தேசிய நெடுஞ்சாலை பவர் கிரீட் அருகே மாரிமுத்து இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு பக்கவாட்டில் உள்ள இரும்பு கம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் போலீசார் மாரிமுத்து உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.