விளாத்திகுளம் அருகே வராகி அம்மனுக்கு நவதானிய அபிஷேகம் நடைபெற்றது !

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள N.சுப்பலாபுரம் (நரிப்பட்டி) கிராமத்தில் புதிதாக பிரதிஷ்டி செய்யப்பட்டுள்ள வாராகி அம்மனுக்கு  முதல் 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா விமர்சையாக நடைபெறுகிறது.

இதனையொட்டி  வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு உளுந்து, பாசி,நெல், எள், சோளம்,  கம்பு உள்ளிட்ட நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வராகி அம்மனுக்கு அரிசி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.