நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில், "ஜி-20 நாடுகள் பன்னாட்டு கருத்தரங்கம்" நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளியல் துறை சார்பாக "ஜி - 20 நாடுகளில் கூட்டமும், நடைமுறைகளும்" என்ற தலைப்பில் மாபெரும் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பொருளியல் துறை தலைவர் பேராசிரியர். முனைவர் சுரேஷ் பாண்டி வரவேற்புரையாற்றினார்.இதில் கேரளா மாநிலம் கொச்சின் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத்தலைவர் அருணாச்சலம் இந்தியா ஜி - 20 நாடுகள் கூட்டத்திற்கு தலைமை ஏற்று இருப்பது இந்தியா உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று குறிப்பிட்டு பேசினார். அதேபோன்று மலேசியாவின் பொருளியல் அறிஞர் டோரிஸ் பத்மினி பேசியபோது, ஜி - 20 நாடுகளின் மாநாட்டின் மூலம் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றார். எடுத்து கருத்தரங்கில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் கப்பா கொண்டல், பாளையங்கோட்டை தூய ஜான் கல்லூரி பேராசிரியர் பெலிக்ஸ் மற்றும் அம்பை கல்லூரி பேராசிரியர் ஆகியோர் ஜி - 20 நாடுகளின் இன்றைய நிலை என்னும் தலைப்பில் மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.சிறப்பாக நடைபெற்ற இந்த பன்னாட்டு கருத்தரங்கில் 30க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளும் 24 கல்லூரிகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த கருத்தரங்கில் வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் முனைவர் மாரிமுத்து, தமிழ் துறைத்தலைவர் முனைவர் முனியசாமி ஆங்கிலத் துறை பேராசிரியர் தங்கமாரி முத்து உட்பட கல்லூரியின் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். உறுப்பினர் கருத்தரங்கின் நிறைவாக ஆழ்வார்குறிச்சி முஸ்தபா நன்றியுரை கூறினார்.