தமிழக முழுவதும் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் புதிய மாவட்ட செயலாளர்களை  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தேர்ந்தெடுத்துள்ளார். இதன் ஒருபகுதி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள முருகன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் அவர்களை  மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.இந்நிகழ்வில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தொகுதி அமைப்பாளர் ஆ.சடையாண்டி, மண்டல துணைச் செயலாளர் மோட்சம்,  மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்டர் மோகன்,விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் குமரவேல், தொண்டரணி அமைப்பாளர் வில்லாளன் ரெஸ்லி , கலை இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பாடகர் பிரபாகரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் மனு வேல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.