தூத்துக்குடி மத்திய அரசு குற்றவியல் சட்டங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்களில் இந்தி வார்த்தைகள் மற்றும் சமஸ்கிருத வார்த்தைகளை திணிக்க முயன்று வருகிறது இதற்கு தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களிள் ஈடுபட்டு வருகின்றனர்.தூத்துக்குடியில் மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத தினிப்பை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் வக்கீல் செங்குட்டுவன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் பிரபு வழக்கறிஞர் சங்க செயலாளர் மார்க்ஸ், மூத்த வழக்கறிஞர் அதிசய குமார், வழக்கறிஞர்கள் சதீஷ்குமார், ரமேஷ் பாண்டியன், அர்ஜுனன், ராஜேஷ், அசோக் குமார், மைக்கேல், ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி
இந்தி திணிப்பதை கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் 25 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தீயில் எறிந்து நாசம்.
அடுத்த
ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026