தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்குப் பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜ குரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா,ரவீந்திரன், சண்முகராஜ் நிறுத்தியலட்சுமி , கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று முதல் அடுத்த மாதம் 9ந்தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை என சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 9ம் நாளான அடுத்த மாதம் 6ந்தேதி திருத் தேரோட்டம், 8ந்தேதி தேதி அம்பாள் தவசு மண்டபத்தில் எழுந்தருளல், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐப்பசி திருக்கல்யாணம் அடுத்த மாதம் 9ந்தேதி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி
செண்பகவல்லியம்மன் திருக்கோவில் ஐப்பசி திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி!
அடுத்த
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 250 ஆடுகள் மீட்கும் பணி தீவிரம்!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026