விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில்,ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1000 மெட்ரிக் டன் அளவுகொண்ட நவீன கிட்டங்கிக்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திகுளத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1000 மெட்ரிக் டன் அளவுகொண்ட நவீன கிட்டங்கி அமைக்கப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு புதியதாக அமைக்கப்படவுள்ள கிட்டங்கிங்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1000 மெட்ரிக் டன் அளவுகொண்ட நவீன கிட்டங்கிக்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மூன்றே நிமிடங்களில் நிகழ்ச்சியை முடித்த கனிமொழி எம்.பி.!
அடுத்த
14 ஆடுகளை விஷம் வைத்துக்கொன்ற கொடூர கொலைகாரன் கைது : ரூ.2.50 இலட்சம் மதிப்பிலான ஆடுகளை இழந்த உரிமையாளர் சோகம்!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026