தூத்துக்குடியில் ரூ.19.23- கோடி மதிப்பீட்டில் புதிதாக 23- மருத்துவ கட்டிடங்கள்!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்றைய தினம் ரூ.19.23- கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள 23- மருத்துவ கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டும்பணியையும்,10.65-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு புதிய கட்டிடங்கள் மற்றும் காந்த அதிர்வலை வரைவு உபகரணத்தையும் (MRISCAN).தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்வில் அமைச்சர், கீதாஜீவன்,அமைச்சர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்.M.C. சண்முகையா, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்,தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு மருத்துவமனை முதல்வர் சிவக்குமார்,மாநகராட்சி ஆணையர் மதுபாலன்,மாவட்ட மருத்துவ அலுவலர் .யாழினி உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.