தூத்துக்குடியில்  ரூ. 9.85 கோடி மதிப்பில் புதிய நூலக கட்டிடம்! 


தூத்துக்குடி தனசேகர் நகரில், மாநகராட்சி நூலக வரி நிதியிலிருந்து ரூ. 9.85 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள நூலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு நூலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார். 


இந்நிகழ்வில், தூத்துக்குடி அமைச்சர் கீதாஜீவன், அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.