ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டி கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்- சிரிப்பாய்ந்த 51 ஜோடி மாடுகள்! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலிவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன், ஸ்ரீ உச்சிமாகாளியம்மன், ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி கொள்கை பந்தயம் நடைபெற்றது, இதில் பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு என போட்டிகள் 5 பிரிவுகளாக நடைபெற்றது, இதில் மதுரை,ராமநாதபுரம்,விருதுநகர்,தூத்துக்குடி,சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 51 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நடைபெற்ற போட்டிகளை முப்புலிவெட்டிஊர் நாட்டாமை முத்துவேல், மற்றும் சி.பி.எம் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ்,ஆகியோர் தொடங்கி துவக்கி வைத்தார்.
(நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம்),5-மைல் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா,முகிலா ராமச்சந்திரன்,மாட்டு வண்டியும், 2-வது பரிசை குறுக்குச்சாலை சகுந்தலா தேவி பஞ்சர் கடை ,மாட்டு வண்டியும், 3-வது நாயினார்புரம் திலிப் ஊராட்சி மன்ற தலைவர், மாட்டு வண்டியும், 4 பரிசு வரதராஜபுரம் முருகப்பெருமாள் மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 4-மைல் தூரம் தேன்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் தேனி மாவட்டம் கூடலூர் வன ரோஜா,மாட்டுவண்டி முதலிடத்தையும், 2-வது தேனி மாவட்டம் கம்பம் பிரதாப்,மாட்டு வண்டியும், 3-வது துரைச்சாமிபுரம் ரமேஷ் ஆடியோஸ் வண்டியும் 4வது தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை தமிழ்ச்செல்வி மாட்டு வண்டியும் பிடித்தன.
தட்டான் செட்டு போட்டியில் முதல் பரிசை தேனி மாவட்டம் சிறை பாறை வெண்டி முத்தையா,மாட்டு வண்டியும் 2-வது பரிசை மேட்டூர் அழகர் பெருமாள் மாட்டு வண்டியும், 3 -வது தெற்கு வண்டானம் வடக்குவா செல்வி அம்மன் மாட்டு வண்டியும்,பிடித்தன
பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி மட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் செல் போன் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது...