கமுதி அருகேஉலக நன்மை வேண்டியும், உடல் ஆரோக்கியம் பெற உடல் முழுவதும் சேற்றை பூசி வினோத வழிபாடு நடத்திய ஆண்கள்-1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பெண்கள்!
ராமநாதபுரம்
மாவட்டம் கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குருநாத
சுவாமி திருக்கோவிலில் 48வது குருபூஜை
மற்றும் பெத்தநாச்சி அம்மன் கோவில் சித்திரை கொடை விழாவை முன்னிட்டு, அழகு குத்தி, சிம்லா மேளம், பொய்க்கால் குதிரையுடன்,கிராம மக்கள் 1008 பால்குடங்களை கிராமம் முழுவதும் ஊர்வலமாக வந்த
பெண்கள், ஸ்ரீ குருநாதசாமி மற்றும் ஸ்ரீ பெத்தநாச்சி
அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் உடல் ஆரோக்கியம் பெறவும், உலக நன்மை வேண்டியும் உடல் முழுவதும் சகதியை
பூசி கையில் வேப்பிலை வைத்தவாறு சேத்தாண்டி வேடம் அணிந்தும், அழகு குத்தியும் கரும்புத் தொட்டில் எடுத்தும் ஏராளமான
பக்தர்கள் தங்களின் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சித்திரை
கொடை விழாவை முன்னிட்டு திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் 3 நாட்கள் நடைபெற உள்ள அன்னதானத்தினை தொடங்கி
வைத்தார்.