தூத்துக்குடி  அருகே சரக்கு வானம் மற்றும் ஆடுகள் திருடியது தொடர்பாக 5 பேர் கைது -சரக்குவாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்  முப்பிலி வெட்டி பகுதியில் நெல்லை மாவட்டம் சிந்து புந்துறையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கல் உடைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் .கார்த்திகேயன் கல் உடைக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்த மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்த நாகப்பன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் கல் உடைக்கும் நிறுவனத்தில் இருந்து ரூபாய் ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள சரக்கு வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.  

இது தொடர்பாக கார்த்திகேயன் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி சரக்கு வாகனத்தை திருடி சென்ற மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த நாகப்பன் மற்றும் ஐயப்பனை கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான்  காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிவஞானபுரம் பகுதியில் மகேஷ் என்பவர் ஆட்டு கொட்டகை அமைத்து ஆடு வளர்த்து வருகிறார் .இந்த ஆட்டு கொட்டைகையில் இருந்து கடந்த மூன்றாம் தேதி 7 ஆடுகள் திருடு போயுள்ளது இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் மகேஷ் எப்போது வென்றான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இதை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விளாத்திகுளம் அருங்குளம் பகுதியை சேர்ந்த வேல் ராஜ் ,மகேந்திரன் , அர்ஜுனன் ஆகிய மூன்று பேரும் சரக்கு வாகனத்தில் ஏழு ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது இதை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகளையும் ஆடு திருட்டிற்கு  பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.