தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் 1586 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் தமிழ் அச்சுக்கூடத்தை உருவாக்கிய ஹென்றி ஹென்றி கெஸ் அடிகளாருக்கு தமிழக அரசு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென ஏழு கடல் துறை மீனவர்கள் கோரிக்கை. தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடற்கரை கிராமத்தில் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த ஹென்றி ஹென்றி கெஸ் என்ற அடிகளார் முத்துக்குளித்துறை பகுதியில் சமய பணிக்காக வந்து தமிழை கற்று ஓலைச்சுவடியில் உள்ள தமிழ் இலக்கியத்தை புன்னக்காயில் கிராமத்தில் முதல் தமிழ் அச்சுக்கூடத்தை கடந்த 1586 ஆம் ஆண்டு உருவாக்கி அடியார் வரலாறு என்ற தமிழ் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். ஆனால் இவரது அச்சுக்கூடம் வரலாற்றில் மறைக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு பின்பு தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டது முதல் தமிழ் அச்சுக்கூடமாக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பல்வேறு நூல்களிலும் உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் மீனவ கிராமத்தில் வரலாற்றில் புன்னக்காயல் அருங்காட்சியகம் உயர் கல்வி பயிற்சி பாசறை கால் கோள் விழா ஏழு கடற்கரை ஊர் நிர்வாக கமிட்டி சார்பில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர் தமிழக அரசுக்கு ஏழு கடல் துறை மீனவர்கள் தமிழின் முதல் அச்சுக்கூடம் குறித்த கோரிக்கை வைத்தனர்,இதில் தமிழக அரசு தமிழ் மொழியின் தொன்மை கருதி புன்னகாயலில் ஹென்றி கெஸ் அடிகளார் உருவாக்கப்பட்ட முதல் அச்சுக்கூடத்தை தமிழக அரசு அங்கீகரித்து புன்னகை கிராமத்தில் ஹென்றி கெஸ் அடிகளார் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் அதேபோன்று தமிழக அரசின் பாடத்திட்டம் மற்றும் கல்லூரிகளில் தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம்1586ம் ஆண்டு ஹென்றி ஹென்றி கெஸ் அடிகளாரால் புன்னகாயலில் நிறுவப்பட்டு தமிழ் இலக்கியம் அச்சிடப்பட்டது என்பதை அங்கீகரித்து வெளியிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. பேட்டி நெய்தல் அண்டோ வரலாற்று ஆய்வாளர்.
தூத்துக்குடி
தமிழ் அச்சுக்கூடத்தை உருவாக்கிய ஹென்றி கெஸ் அடிகளாருக்கு தமிழக அரசு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் ரூபாய் 4.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவி தொகை!
அடுத்த
ஆடு மாடுகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026