லேகியம் சாப்பிட்டால் குழந்தை உண்டாகும் - அக்குபஞ்சர் படித்துவிட்டு சித்த மருத்துவர் என்று கூறி மளிகை கடைக்காரரிடம் பணம் பறித்த போலி மருத்துவர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது - ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (41). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். முத்துக்குமாருக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது குழந்தைகள் இல்லை. குழந்தைக்காக பல்வேறு இடங்களில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே கருத்த பாலம் பகுதியில் செயல்பட்டு வரும் பொதிகை ஆயுர்வேதம் என்ற தனியார் சித்த மருத்துவமனையில் குழந்தைக்காக சிகிச்சை எடுத்துள்ளார். இந்த மருத்துவமனையை நெல்லை மகிழ்ச்சி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். மளிகை கடை முத்துக்குமார் கண்ணதாசன் ஆண்டுகளாக அந்த தனியார் மருத்துவமனையில் லேகியம் வாங்கி சாப்பிட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.‌ஒவ்வொரு முறையும் லேகியத்திற்காக ஐந்தாயிரம் கொடுத்து வந்துள்ளார். இருந்த போதிலும் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் மளிகை கடை முத்துக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு , விசாரித்துள்ளார். விசாரணையில் சித்த மருத்துவமனை நடத்தும் முத்துக்குமார் சித்த மருத்துவர் இல்லை என்றும் , அக்குபஞ்சர் படித்துவிட்டு சித்த மருத்துவர் என்று கூறி மருத்துவம் செய்வதாக தெரியவந்துள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்த மளிகை கடை முத்துக்குமார் தான் ஏமாந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென மளிகை கடை முத்துக்குமாரை, செத்த மருத்துவமனை நடத்தி வரும் முத்துக்குமார் தொடர்பு கொண்டு உள்ளார். புதிய மருந்து ஒன்று இருப்பதாகவும், அதை சாப்பிட்டால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும், அதன் விலையை பத்தாயிரம் ரூபாய் என்றும்,, உடனடியாக வந்து பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதற்கு மளிகை கடை முத்துக்குமார் தற்போது தன்னால் வர இயலாது இன்னும் இரண்டு நாள் கழித்து வருவதாக கூறியுள்ளார். ஆனால் சித்த மருத்துவமனை நடைபெறும் முத்துக்குமார் தான் நேரில் ஊருக்கு வருவதாகவும் பணத்தை எடுத்து வையுங்கள்,  அங்கு வந்து மருந்தை கொடுத்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் சொன்னபடியே காரில் செத்த மருத்துவனை நடத்தி வரும் முத்துக்குமாரும், அவருடன் நெல்லை வீரல பொருள்செல்வி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பேச்சிமுத்து (20) உடன் இருந்துள்ளார்.புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் சாலையில் காரை நிறுத்திவிட்டு மளிகை கடை முத்துக்குமாரை வர சொல்லியுள்ளனர். அங்கு வந்த மளிகை கடை முத்துக்குமார், அக்குபஞ்சர் படித்துவிட்டு சித்த மருத்துவர் என்று கூறி என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார். இனி நான் பணம் தரப் போவதில்லை, இது குறித்து காவல்துறையில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். பேசிக் கொண்டே இருக்கும்போது தனியார் சித்த மருத்துவமனை நடத்தும் முத்துக்குமார் மற்றும் அவருடன் வந்த பேச்சிமுத்து இருவரும், கத்தியை காட்டி பணத்தை கொடுத்து விடு இல்லை என்றால் நடப்பது வேறு என்று மளிகை கடை முத்துக்குமாரை மிரட்டி பணத்தைப் பறித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து மளிகை கடை முத்துக்குமார் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் சித்த மருத்துவமனை நடத்துவர் முத்துக்குமார் , பேச்சு முத்து இருவரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்...