ஆற்றங்கரை வைப்பாற்றில்  அடையாளம் தெரியாத முதியவர்  ஆண் சடலம்?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை வைப்பாறு பகுதியில்  (65)வயது மதிக்கத்தக்க  முதியவர் சடலம் ஒன்று கிடப்பதாக  அப்பகுதியினர் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் அடிப்படையில் விளாத்திகுளம்  காவல் நிலைய போலீசார் நம் முதியவரின் சடலத்தை மீட்டு  விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூர் ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இறந்த முதியவர் யார் என்பது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த முதியவர் யார் என்பது பற்றி தகவல் தெரிந்தால் இந்தத் தொடர்பு எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர். 9498101887-9498196196