தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பனை மரம் ஒன்றில் கொடிய விஷம் கொண்ட நூற்றுக்கணக்கான "கடம்பா குளவிகள்" மிகப்பெரிய அளவில் கூடுகட்டி இருந்து வந்தது மட்டுமின்றி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலரை கொடிய விஷம் கொண்ட இந்த "கடம்பா குளவிகள்" கொட்டியதால் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.


இதனால் இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இப்பகுதியை அச்சத்துடனே கடந்து சென்றுள்ளனர். இதனையடுத்து சோழபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலையத்திற்கு‌ தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து அங்கு வந்த நிலைய அலுவலர் சுந்தர் ராஜ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை வீரர்கள் பாதுகாப்பு உடைகள் அணிந்து, தீப்பந்தங்களை வைத்து அரும்பாடுபட்டு கொடிய விஷம் கொண்ட இந்த "கடம்பா குளவிகள்" கூட்டினை கலைத்தனர்.


இதனால் கிராம மக்கள் நிம்மதியுடன் கூட்டினை அரும்பாடு பட்டு கலைத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.