விளாத்திகுளம் அருகே பேருந்து ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி நாயக்கர் என்பவரின் மகன் ராமச்சந்திரன்(52)ராமச்சந்திரன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.ராமச்சந்திரனுக்கும் மனைவி கிருஷ்ணவேணிக்கும் அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் 17-06-2023 சனிக்கிழமை இரவு வழக்கம்போல் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனவருத்தத்தில் இருந்த ராமச்சந்திரன் ஊரின் கம்மாக்கரையில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

இதனை அடுத்து உடலை கைப்பற்றிய எட்டயபுரம் காவல் நிலைய போலீசார்  ராமச்சந்திரனின் உடலை எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.