ஓட்டப்பிடாரம் அருகே கோவில் திருவிழாவினை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்..
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ கருப்பசாமி,கோவில் கொடை விழா முன்னிட்டு சின்ன மாடு , பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் சின்ன மாட்டு வண்டி போட்டியில் 30 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 60 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் தொடங்கி துவக்கி வைத்தார்.
6 மைல் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை வேலாயுதபுரம் லிங்கம், மாட்டு வண்டியும், 2-வது பரிசை சுப்பம்மாள் மறுகால்குறிச்சி கண்ணன் நாகம்பட்டி, மாட்டு வண்டியும், 3-வது சொக்கலிங்கபுரம் ஸ்ரீமித்ரா மாட்டு வண்டியும், 4 பரிசு துரைச்சாமிபுரம் ஐயங்கார் பேக்கரி சுரேஷ்குமார் மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 4-மைல் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் சண்முகபுரம் சுப்புராஜ் மாட்டுவண்டி முதலிடத்தையும், 2-வது இடத்தை பத்மநாதமங்கலம் காளிமுத்து மாட்டு வண்டியும், 3-வது இடத்தை கே. வேலாயுதபுரம் லிங்கம் வண்டியும் 4வது தொட்டம்பட்டி ஈஸ்வரி அம்மன் துணை, பிடித்தன.
பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி மட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது...