விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மத்திய அரசின் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட பட்டியல் அணி தலைவர் அய்யாதுரை பாண்டியன், ஓபிசி அணி தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொது செயலாளர் கிஷோர் குமார், சரவண கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் சேதுராஜ், மாவட்ட செயலாளர் அமுதா கணேசன் மற்றும் மாநில மகளிரணி செயற்குழு உறுப்பினர் லீலாவதி, ஒன்றிய தலைவர்கள் கனகவேல், பார்த்திபன்,எல்லப்பன்,சிவபெருமாள் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி, பட்டியல் அணி,இளைஞர் அணி, மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.