தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கணேசபுரம் பகுதியில் Q பிரிவு ஆய்வாளர் திருமதி விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ்,செல்வகுமார், தலைமை காவலர் ராமர், இருதயராஜ், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த லோடு வேனை சோதனை செய்தபோது, அந்த வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 43 மூடைகளில் சுமார் 1250 கிலோ எடை கொண்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பீடி இலைப் பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட திருச்செந்தூர் ஆலந்தலை பகுதியை சேர்ந்த தொம்மை என்பவரின் மகன் ராஜா(29),  மற்றும் தூத்துக்குடி மாணிக்கபுரம் பகுதி வேல் என்பவரின் மகன் பாலமுருகன் (35) ஆகிய இருவரையும் Q பிரிவு போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த பீடிஇலை பண்டங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட லோடு வேனையும் பறிமுதல் செய்தனர் .