கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி சார்பில்
காமராஜரின் 121வது
பிறந்த தின விழாவை முன்னிட்டு காமராஜரின் மாஸ்க் அணிந்த மாணவர்களின் விழிப்புணர்வு
ஊர்வலம் நடைபெற்றது.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில்
காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு
காமராஜரின் மாஸ்க்அணிந்து 121 மாணவர்களும்,121 மாணவர்கள்
கையில் தேசிய கொடி ஏந்தியும், சாரண இயக்க மாணவர்களும் ஊர்வலமாக முக்கிய
வீதிகள் வழியாக சென்று மெயின் ரோட்டில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பள்ளி வளாகத்தில் காமராஜரின் பிறந்த தின விழா
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்,காமராஜர் புத்தகமும் வழங்கப்பட்டது.121 மாணவர்களுக்கு
நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே பழனி செல்வம் சார்பில் சீருடை வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி
நாடார் உறவின்முறை சங்க துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.செயலாளர் ஜெயபாலன், பத்திரகாளியம்மன்
கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளிச் செயலாளர்
கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்
வனசுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் பிறந்த தின ஊர்வலத்தை
கொடியசைத்து துவக்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளையும், சீருடைகளையும்
வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க
உறுப்பினர் ராஜேந்திர பிரசாத்,தொழிலதிபர் செல்வம்,பள்ளி கல்வி
குழு உறுப்பினர்கள் மணிக்கொடி,ராஜா அமரேந்திரன்,பொன் ராமலிங்கம், பாரதியார்
நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பள்ளி தலைமை
ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.
தூத்துக்குடி
கோவில்பட்டியில காமராஜரின் மாஸ்க் அணிந்த மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா!
அடுத்த
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் 121வது காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026