விளாத்திகுளம் அருகே வாகன மோதி விபத்துக்குள்ளானதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த  பெண் பலி!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரின்  மனைவி  மாரியம்மாள் வயது (44),மாரியம்மாள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார், இந்நிலையில் மேல ஈரால் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மாரியம்மாள்  ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, திருச்செந்தூரிலிருந்து சிவகங்கை சென்று கொண்டிருந்த கார் மோதி விபத்துக்குள்ளாகி தூக்கி வீசப்பட்டதில் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து மாரியம்மாளின் உடலை  எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் உடற்கூறாய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு மாரியம்மாளின் உடலை அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பெத்தமங்கலம் கிராமத்தை   சேர்ந்த வள்ளியப்பன் என்பவரின் மகன் நித்திஷ் என்பவரிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.